University Admission 2020/2021
The University Grants Commission (UGC) will entertain application for University Admission to Sri Lankan universities from candidates who have Satisfied the minimum requirements for university admission at the GCE (Advanced level) Examination held in October 2020, The Commissioner General of Examinations has already informed the candidates whether they have satisfied the minimum requirements for university admission.
இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிகோரும் பொருட்டு 2020 அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற க.பொ.த. (உயர்தர) பரீட்சையில் ஆகக் குறைந்த தேவைகளைத் திருப்தி செய்துள்ள பரீட்சார்த்திகளிடமிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும். பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக் குறைந்த தேவைகளை யார் திருப்தி செய்துள்ளார்கள் என்பதை பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் பரீட்சார்த்திகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டூள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கு இணைய வழி ஊடாக விண்ணப்பித்தல் கட்டாயமாக்கப்பட்டூள்ளது என்பது மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது. பல்கலைக்கழக அனுமதிக்கான ஆகக்குறைந்த தகைமைகள்
பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியானோர் என அறிவிக்கப்பட்டூள்ள, பரீட்சார்த்திகள் பெற்றிருக்க வேண்டியவை.
- அங்கீகரிக்கப்பட்ட சகல மூன்று பாடங்களிலும் ஒரே தடவையில் குறைந்தது சாதாரண சித்தி (S) களை ஆகக் கூடுதலாக 3 அமர்வுகளுள் பெற்றிருத்தல்.
- பொது சாதாரண வினாத்தாளில் ஆகக் குறைந்தது 30% புள்ளிகள் பெற்றிருத்தல்.




Closing Date: 11/06/2021
Website: https://www.ugc.ac.lk/
Source: Daily News, Thinakaran 21/05/2021