Trainees For Training in the Post of Dental Technician
Recruitment of Trainees For Training in the Post of Dental Technician of Para Medical Service – 2021
Applications are invited from eligible Sri Lankan citizens for the recruitment as trainees to the course which is conducted by the Faculty of Dental Sciences, University of Peradeniya / Institute of Oral Health, Maharagama of Ministry of Health in relation to the post of Dental Technician of the Paramedical services of the Ministry of Health.
துணை மருத்துவ சேவைக்குரித்தான பல் தொழில்நுட்பவியலாளர் பதவியின் பயிற்சிக்காக பயிலுனர்களை ஆட்சேர்த்தல் – 2021
சுகாதார அமைச்சின் துணை மருத்துவ சேவைக்குரித்தான பல் தொழில்நுட்பவியலாளர் பதவிக்காக பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவ பீடம் / சுகாதார அமைச்சின் மஹரகம வாய் வழி சுகாதார நிறுவனத்தின் ஊடாக நடாத்தப்படும் பல் தொழில்நுட்பவியலாளர் கற்கை நெறிக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தகைமைகளைக் கொண்ட இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பதவிக்கு உரித்தான கல்வி மற்றும் ஏனைய தகைமைகள்:
சிங்களம் / தமிழ்மொழி, கணிதம், விஞ்ஞானம் மற்றும் மேலும் ஒரு பாடத்தில் திறமைச் சித்தியுடன் இரண்டு அமர்வுக்கு மேற்படாமல் ஆங்கில மொழி உட்பட ஆறு (06) பாடங்களில் க.பொ.த (சா.தரம்) சித்தி பெற்றிருத்தல்.
2017 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் க.பொ.த (உ.தரம்) பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் இரசாயனவியல் பாடத்தில் திறமை சித்தியுடன் பௌதீகவியல், உயிரியல், விவசாயம் ஆகிய பாடங்களில் ஏதாவது இரண்டு (02) பாடத்தில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல்.
ஏனைய பொது தகைமைகள்:
- இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரிகள் விண்ணப்பங்கள் கோரப்படும் திகதியன்று 18 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
- பயிற்சியின் பின்னர் மத்திய அரச சேவையில் அல்லது மாகாண அரச சேவையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்.
- சிறந்த உடல், உள தகுதியுடன் இருக்க வேண்டும்.
- தாம் விண்ணப்பிக்கும் மாவட்டத்தில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு கிட்டிய 03 வருடத்திற்குள் தொடர்ச்சியாக வசித்திருக்க வேண்டும். (பிரதேச செயலாளரின் மேலொப்பமிட்ட அல்லது கிராம அலுவலர் கையொப்பமிட்ட DS 4 சான்றிதழ் சமர்ப்பித்தல் வேண்டும்.)
Closing Date: 09/07/2021
Website: http://health.gov.lk/
Source: Government Gazette 2021 May 28 (Sinhala / Tamil / English) Free Download