பேஸ்புக் நிறுவனம் Tik Tok Appற்கு போட்டியாக புதிய Application ஒன்றை கொண்டு வர இருக்கிறது. பொதுவாக பேஸ்புக் நிறுவனம் இரண்டு விதிகளை நம்பி செயல்பட்டு வருகிறது. தனக்கு போட்டியான நிறுவனங்களை வாங்குவது, இல்லையென்றால் அதைவிட சிறந்த ஆப் ஒன்றை உருவாக்கி போட்டியான நிறுவனத்தை காலி செய்வது. அப்படித்தான் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராமை பேஸ்புக் வாங்கியது. அதே சமயம் வாங்க முடியாத டிண்டருக்கு போட்டியாக Dating App ஒன்றை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது Tik Tok எதிராக களமிறங்கி உள்ளது.
இளைஞர்கள் மத்தியில் சமீபத்திய பீவர் இந்த Tik Tok App. பாடுவது, ஆடுவது, சண்டை போடுவது, சமைப்பது, காதலிப்பது என்று அனைத்தையும் இந்த வீடியோ Appபில்தான் செய்கிறார்கள். சமயங்களில் இதில் சில வீடியோக்கள் வந்து எரிச்சல் ஊட்டவும் செய்யும். ஆனாலும் இப்போது வளரும் Appகளில் No.1 இடத்தில் இருப்பது Tik Tok App.

Tik Tok App பற்றி தெரியாதவர்கள் Musical.ly App என்றால் கண்டிப்பாக கண்டுபிடித்து விடுவார்கள். Musical.ly App சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் மூலம் வாங்கப்பட்டது. 1 பில்லியன் டாலர் கொடுத்து இந்த Musical.ly App வாங்கி அதற்கு Tik Tok என்று பெயர் வைக்கப்பட்டது.
அதேபோல் இதில் உள்ள வீடியோக்களை நேரடியாக பேஸ்புக்கில் ஷேர் செய்ய முடியும் (இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பேஸ்புக்கில் ஷேர் செய்வது போல). அதேபோல் பேஸ்புக் இதை நமக்கே தெரியாமல் பேஸ்புக்கில் வைத்து சோதனை செய்து வருகிறது. பேஸ்புக்கில் இப்போது லைவ் வீடியோவில் லிப் சிங்க் என்ற Live வாக பாடும் வசதி சேர்ந்துள்ளது.
Lasso வை சோதிக்கவே இதை இதில் இணைத்துள்ளனர்.