SLIATE நடாத்தும் HND in English பாடநெறி விண்ணப்பத்தில் மாற்றம்.

Hits: 19

கடந்த வாரம் விண்ணப்பம் கோரப்பட்டிருந்த (SLIATE) பாடநெறிகளில் ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிக்கான அறிவித்தல் மாற்றப்பட்டுள்ளது.

  • திறன்கள் அபிவிருத்தி, தொழிற் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சு
  • இலங்கை உயா்மட்ட தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் (SLIATE)
  • 2020 ஆம் கல்வியாண்டிற்காக உயர் தொழில்நுட்பவியல் நிறுவகங்களுக்கான மாணவர்களின் அனுமதி.

2020.09.04 ஆந் திகதிய 2192 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியான 09-348 ஆம் அறிவித்தலின் 10 ஆம் பந்தி பின்வருமாறு திருத்தப்படுகின்றது.

  1. ஆங்கிலத்தில் உயா் தேசிய டிப்ளோமா (HND in English)

10.1 – முழு நேரம் – 2 1/2 வருடங்கள்.

விண்ணப்பதாரிகள் பின்வரும் தகைமைகளைக் கொண்டிருத்தல் வேண்டும்.

(i) எந்த ஒரு துறையில் ஒரே அமர்வில் க.பொ.த. (உ/த) பரிட்சையில் சித்தி,

மற்றும்

இலங்கைப் பரிட்சைகள் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் க.பொ.த. (உ.த.) பரீட்சையில் பொதுவான ஆங்கில பாடத்தில் சாதாரண சித்தி.

அல்லது

இலங்கைப் பரிட்சைகள் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் க.பொ.த. (ச.த.) பரீட்சையில் பொதுவான ஆங்கில பாடத்தில் திறமைச் சித்தி

அல்லது

இலங்கைப் பரிட்சைகள் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் Appreciation of English Literary Texts பாடத்தில் பெற்ற சாதாரண சித்தி.

Sliate நடாத்தும் Hnd In English பாடநெறி விண்ணப்பத்தில் மாற்றம்.
SLIATE நடாத்தும் HND in English பாடநெறி விண்ணப்பத்தில் மாற்றம்.

error: Content is protected !!