Police Constable

Hits: 0

இலங்கைப் பொலிஸ் சேவையில் பயிலுநர் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கு இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள்
கோரப்படுகின்றன.

தேவையான அடிப்படைத் தகைமைகள் 

வயதெல்லை.- வர்த்தமானி அறிவித்தலின்படி விண்ணப்ப முடிவுத் திகதியன்று 18-28 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஏற்கனவே இலங்கைப் பொலிஸ் சேவையில் சேவையாற்றும் பொலிஸ் கொஸ்தாபல் சாரதி உத்தியோகத்தர்களுக்கு விண்ணப்ப முடிவுத் திகதியன்று 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.

கல்வித் தகைமைகள்.

க.பொ.த. (சா. தர.) பரீட்சையில் கணிதம் / தாய்மொழி உட்பட இரண்டு அமர்வுகளுக்கு மேற்படாமல் குறைந்தது 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும். இரண்டு தடவைகள் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்கள் முதலாவது அமர்வில் ஒரே முறையில் 05 பாடங்களில் கணிதம்/ தாய் மொழி இரண்டு பாடங்களில் அல்லது ஒரு பாடத்திலேனும் சித்தியடைத்திருத்தல் வேண்டும்.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் வகைப்படுத்தலின்படி பாடங்களின் எண்ணிக்கையை வகைப்படுத்தும் போது விஞ்ஞான பாட இலக்கங்கள் 41 உம் 44 உம் ஒரு பாடமாகவும் இல. 42, 45 ஐக் கொண்ட கணித பாடங்கள் ஒரு பாடமாகவும் கருதப்படும். க. பொ. த. (சா. தர.) பரீட்சையில் சித்தியடைந்த பாடங்களின் எண்ணிக்கை அதன் பிரகாரம் தீர்மானிக்கப்படும்.

க. பொ. த. (சா. தர.) பரீட்சையில் எழுத்துப் பரீட்சையில் தொழில்நுட்பப் பாடத்தில் சித்தியடையாமல் அதே பாடத்தில் செயல்முறைப் பரீட்சையில் சித்தியடைந்திருந்த போதும் அப்பாடத்தில் சித்தியடையாதவராகக் கருதப்படுவார்.

விருப்பத்திற்குரிய தமிழ்/ஆங்கிலம்/ சிங்களம் ஆகிய பாடங்கள் க. பொ. த. (சா. தர.) பாடத்திட்டத்திற்குள் உள்ளடக்கப்படாமையால் அப்பாடங்களில் சித்திபெறுதல் க. பொ. த. (சா. தர.) பரீட்சையில்
சித்தியெய்திய பாடங்களாகக் கருதப்படமாட்டாது.

பௌதீகத் தகைமைகள்

  • உயரம் : 05 அடி 04 அங்குலம் (ஆகக் குறைந்தது)
  • மார்பு : 30 அங்குலம் (ஆகக் குறைந்தது மூச்சுவிட்ட நிலையில்)

சிறந்த விளையாட்டுத் திறமையுடைய தேசிய மட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் திறமைகாட்டியுள்ள அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கு பற்றி இலங்கைக்கு புகழ் ஈட்டித்தந்துள்ள விண்ணப்பதாரர் ஒருவரின் பௌதீக தகைமைகள் சற்று குறைவாக இருப்பினும் அவர் பிற தகைமைகளைப் பூர்த்தி செய்திருப்பின் பொலிஸ் மா அதிபரின் தற்றுணிபின் படி தகைமை பெறுவர்.

பார்வை தொடர்பான தேவை.

ஒவ்வொரு கண்ணிலும் பார்வை 6/12 இற்கு குறைவாக இருத்தலாகாது. ஒரு கண்ணின் பார்வை 6/ 6 ஆகவும் மற்ற கண்ணின் பார்வை 6/18 ஆகவும் இருப்பின் ஏற்றுக்கொள்ளப்படும்.
நிறப்பார்வை சாதாரணமாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் ஒருவர் மூக்குக் கண்ணாடி அல்லது பொருத்து வில்லைகள் பாவிப்பவராயின் தகைமை அற்றவராவார்.

பிற தகைமைகள்.

விண்ணப்பதாரர் திருமணமாகாதவராக இருத்தல் வேண்டும். (விவாகரத்துப் பெற்றவர்கள் தகுதியற்றவராக கருதப்படுவர்). மற்றைய தகைமைகள் உடைய ஏற்கனவே இலங்கைப் பொலிஸில் சேவையாற்றும் பொலிஸ் கொஸ்தாபல் சாரதி பதவிக்கு இந்நிபந்தனை மாத்திரம் ஏற்புடையதாகாது.

Download Application and Details

Closing Date: 2020-03-24

Source: Government Gazette 2020.01.24

error: Content is protected !!