7 நாட்களுக்குள் பயிற்சிக்கு சமூகம் தராவிட்டால் நியமனம் இரத்து

Hits: 0

50 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கு அமைய, பட்டதாரிகளுக்கு அவர்களுக்கான பட்டதாரி பயிலுனர் நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

7 நாட்களுக்குள் பயிற்சிக்கு சமூகம் தராவிட்டால் நியமனம் இரத்து
7 நாட்களுக்குள் பயிற்சிக்கு சமூகம் தராவிட்டால் நியமனம் இரத்து

அதற்கமைய, மூன்று நாட்களுக்குள் உரிய பிரதேச செயலகத்தில் தாம் நியமனத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்குமாறு குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்

  1. ஆளடையாள அட்டை
  2. பிறப்பத்தாட்சிப் பத்திரம்
  3. வதிவிடத்தை உறுதிப்படுத்தும் கிராம சேவகரின் அத்தாட்சி
  4. பட்ட சான்றிதழ் அல்லது உரிய பல்கலைக்கழகத்தினால் பெறுபேறுகள் உறுதிப்படுத்தப்பட்ட அத்தாட்சிக் கடிதம் அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அல்லது கல்வியமைச்சின் கடிதம் மற்றும் பெயரில் ஏதாவது மாற்றங்கள் காணப்படுமாயின் அது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றையும் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 7 நாட்களுக்குள் பயிற்சிக்கு சமூகமளிக்காவிட்டால், குறித்த நியமனம் இரத்து செய்யப்படும் எனவும், அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் கோரிக்கைகள் எக்காரணத்தைக் கொண்டும் அங்கீகரிக்கப்படமாட்டாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் உரிய முறையில் பயிற்சியை நிறைவு செய்பவர்களுக்கு, தொழிலுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: www.thinakaran.lk/2020/03/02

நியமனக்கடிதத்திலுள்ள முக்கிய விடயங்கள்.

error: Content is protected !!