35 வருடங்களுக்கு பிறகு தரையிரங்கிய விமானம்

Hits: 26

இந்தஉலகத்தில் பல நிகழ்வுகள் மர்மமான முறையில் நடக்கிறது. இதில் பல மர்மங்கள் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு காலத்தில் தீர்க்கப்படும். ஆனால் இதில் சில மர்மங்கள் மட்டும் ரொம்ப காலமாக தீர்க்கப்படாமல் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த மர்மத்தை இப்போ வரைக்கும் முழுமையாக யாராலும் விளக்க முடியாது. அப்படி என்னதான் நடந்தது?

35 வருடங்களுக்கு பிறகு தரையிரங்கிய விமானம்

1954 செப்டம்பர் 4 ஆம் தேதி காலை வேளையில் சாண்டியாகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஜெர்மனியிலிருந்து 88 பயணிகள் மற்றும் விமானி உட்பட 4 பணியாளர்களுடன் சென்றது. இது சில மணி நேரத்தில் கட்டுப்பாட்டு தளத்துக்கும் விமானத்துக்கும் இடையில் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த விமானம் தரையிறங்க வேண்டிய விமான நிலையத்தையும் அடையாமல் போனதால் மீட்பு குழுவினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

பாதையிலே தீவிரமாக தேடியும் எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. அந்த விமானம் பழுது அடைந்து விபத்து ஏற்பட்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி இருக்கும் என்று கருதி தேடுதல் பணியை கைவிட்டு அந்த விமானத்தில் இருந்த 92 பேருக்கும் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க முடியாததால் பல சிக்கல்களை சந்தித்து. சாண்டியாகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாமல் 1956ல் மூடப்பட்டது. இதன்பிறகு சில நாட்களில் நடந்த நிகழ்வை உலகம் மறந்து போனது.

விமானம் காணாமல் போன சம்பவம் நடந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு 12 அக்டோபர் 1989 இல் விமான நிலையத்தில் வழக்கத்துக்கு மாறான ஒரு விமானம் ரேடாரில் தெரியாத வகையில் திடீர்னு வந்து தரையிறங்கியது. வராத ஒரு புது விமானம் வந்து தரையிறங்கியது. அதை விமான நிலைய அதிகாரிகள் பக்கத்தில் சென்று பரிசோதித்து பார்த்தனர். இப்போதுதான் உண்மையான மர்மம் உருவானது. 35 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன சாண்டியாகோ நிறுவனத்துக்கு சொந்தமான பிளைட் 513 விமானம்தான் அது. அதிகாரிகள் அந்த விமானத்துக்கு உள்ள போய் பார்த்தனர். அப்போது எல்லாரையும் அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் பயணிகள் இருக்கையில் வெறும் எலும்புக் கூடுகள் மட்டும் இருந்தது. இதை திட்டமிட்டு செய்த விமானத்தை ஓட்டிக் கொண்டு வந்தவர்களை விசாரித்தால் தெரியும் என்று கருதி வேகமாக போய் பார்த்தனர். அங்கும் விமான இருக்கையில் ஒரு எலும்புக்கூடு விமானத்தை இயக்கிய நிலையில் இருந்தது. இருக்கையில் இருந்த அந்த எலும்புக்கூட்டை ஆராய்ந்ததில் அது 35 வருடங்களுக்கு முன்பு விமானம் காணாமல் போனபோது அந்த விமானத்தில் இருந்ததாக தெரிய வந்தது.

35 வருடங்களுக்கு பிறகு தரையிரங்கிய விமானம்

அரசு இது ஒரு முக்கிய பிரச்சினையாக கருதி சில முக்கிய நிபுணர்களை கொண்டு ஒரு தனிப்படை அமைத்து தீவிரமான விசாரணைகளையும் ஆய்வுகளை நடத்தியது. விசாரணை முடிவில் அரசுத் தரப்பிலிருந்து எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தார்கள். இதனாலேயே மற்ற பல ஆய்வாளர்கள் இவ்வளவு நாள் விமானம் எங்கே இருந்திருக்கும் வெறும் எலும்புக் கூடுகள் எரிபொருள் இல்லாமல் 35 வருடமாக ஒரு விமானத்தை எப்படி பறக்க விட முடியும். இப்படி பலவிதமான கேள்விகளை எழுப்பியதோடு தங்களால் முடிந்த சில ஆய்வுகளை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இதில் குறிப்பிடத்தகுந்த சில முடிவுகள் அமானுஷ்ய நிகழ்வுகள் ஆய்வு செய்யகூடிய 51 கருந்துளை மாதிரியான ஏதோ ஒரு சக்தியால் ஈர்க்கப்பட்டு 35 வருடங்களின் பின்னர் தூக்கி வீசப்பட்டு இருக்கும். இது முக்கியமா டைம் டிராவல் கூட இருக்கலாம் அப்படின்னு தன்னுடைய கருத்தை கூறினார்கள். இந்த கருத்தை உலகத்தில் சிலர் ஏற்றுக்கொண்டாலும் வேறு சிலர் இந்த கருத்தை எதிர்த்திருக்கிறார்கள். இந்த கருத்தை ஏற்று கவர்மெண்ட் எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியமாக பாதுகாத்து வந்தனர். இந்த நிகழ்வுக்குப் பின்னர் டாக்டர் ஓட்டல்ல கருத்து தெரிவிக்கையில் மிகப்பெரிய ஒரு மர்மம் மறைந்து இருக்கும் அதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் ஏற்படலாம் என்று கூறினார்.

விமானம் பற்றிய மர்மத்தை அரசு வெளியிட இருந்தது பெரிய தவறு உண்மையில் நடந்தது என்ன ? விமானம் எப்படி தரையிறங்கியது? அதில் பயணம் செய்த 92 நபர்களின் குடும்பங்களுக்கு என்ன பதில் கூறுவது? இப்படி பல கேள்விகளை ஓய்வு பெற்ற இயற்பியல் பேராசிரியராக ரோட்மான் அவர்கள் நடந்த நிகழ்வுக்கு சரியான விளக்கத்தையும் கொடுத்து இந்த மாதிரியான நிகழ்வுகள் தான் பிரபஞ்சமும் இயற்கையும் எந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது மனிதர்களுக்கு அவ்வப்போது உணர்த்தி வருகிறது.

error: Content is protected !!