2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. எனினும் அவற்றை வெளியிடுவது தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை

Hits: 17

2019 ஆம் ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, வெட்டுப்புள்ளிகள் தயாரிக்கப்பட்டுவிட்டன. எனினும் அவற்றை வெளியிடுவது தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

தற்போது க.பொ.த உயர் தரப் பரீட்சை நடைபெற்றுவருவதால் கடந்த பரீட்சையின் அடிப்படையில் வெட்டுப்புள்ளியை வெளியிடுவதை தாமதப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருட வெட்டுப்புள்ளி வெளியிடப்படாமை தொடர்பாக மாணவர்கள் உட்பட பல தரப்பினர் பலத்த கண்டனங்களை எழுப்பிவருகின்றனர்.

கோவிட்19 நிலைமையினால் வெட்டுப்புள்ளிகளைத் தயாரிப்பது தாமதமடைந்ததாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!