விசேட அறிவித்தல் – கல்வி அமைச்சு

Hits: 0

விசேட அறிவித்தல் - கல்வி அமைச்சு
விசேட அறிவித்தல் - கல்வி அமைச்சு

Translated from Original source in Sinhala

நாட்டின் தற்போதைய கோவிட் பரவலைக் கருத்திற்கொண்டு, கல்வித்துறையின் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்மார் மற்றும் ஏனைய அணைத்து கல்வித்துறை சார்ந்தவர்களின் சுகாதார பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு கடும் அவதானத்துடன் செயற்படுகின்றது.

இது தொடர்பாக கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலுக்கமைய, கல்வி அமைச்சில், மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஆகியோரை இணைத்து தகவல் நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையம் பிரதிக்கல்விப் பணிப்பாளரின் கீழ் பின்வரும் தொடர்பு இலக்கங்களின் கீழ் இயங்கும்.

  • அவசர தொலைபேசி 1988
  • தொலை நகல் 0112 785 818
  • ஈமெயில info@moe.gov.lk

இந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டு, அதிபர்மார், கல்வி பணிப்பாளர்கள் உட்பட கல்வி அதிகாரிகள் தமது சேவை நிலையம் மற்றும் பிரதேசத்தின் கோவிட் 19 சம்பந்தமாக தகவல்களை வழங்கலாம். இந்த தகவல் நிலையத்தின் மூலம் நாட்டின் அனைத்து மாகாண, வலய, கோட்டத்தில் உள்ள வைரசு பரவல் தொடர்பாக பாடசாலை சார்பான தகவல்கள் சேகரிக்கப்படுவதுடன், அத்தகவல்கள் தொடர்பாக சுகாதார அதிகாரிகளை அறிவுறுத்தி, சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவது தொடர்பான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சானது, கல்விப்புலம் சார்ந்த அனைவரினதும், சுகாதார ஆரோக்கிம் சம்பந்தமாக ஆழமாக சிந்திப்பதாகவும், இந்நிலைமை மேலும் தீவிரமடைந்தால், நாட்டின் அனைத்து பாடசாலைகள், பிரிவெனாக்கள், மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் அணைத்துக்கும் மீண்டும் விடுமுறை வழங்கப்படும்.

error: Content is protected !!