மாணவர்களுக்கான நிகழ்நிலை கற்றல் வளம்.

Hits: 29

தற்போதைய சூழ்நிலையில் 4.5 மில்லியன் பாடாசலை மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். நிகழ்நிலை கற்றலானது முக்கிய இடத்தை வகித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், போசணை, ஆரோக்கியம், உணவு பாதுகாப்பு என்பவற்றை பெற்றோர்கள் மூலம் மாணவர்கள் கற்றுக்கொள்ள கல்வி அமைச்சு மற்றும் நெஸ்லே நிறுவனம் இணைந்து நிகழ்நிலை கற்றல் வள மூலம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

மாணவர்களிடத்தில் ஆரோக்கிய வாழ்க்கை முறையை விருத்தி செய்து கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இம்முறைமை இலங்கை பாடசாலைகளில் மேலதிக பாடவிதானத்துடன் இணைக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றது.

6 அத்தியாயங்களின் கீழ் மதிப்பிடப்படும் இந்த பயிற்சியின் இறுதியில், 60 % க்கு மேற்பட்ட புள்ளிகளை பெறும் மாணாக்கருக்கு கல்வி அமைச்சின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

  • உணவும் போஷாக்கும்
  • போஷாக்கு தொடர்பான தேக ஆரோக்கிய விளைவுகள
  • உணவுப் பாதுகாப்பும் சுகாதாரமும்
  • தவறான உணவுப்பழக்க வழக்கங்கள்
  • உணவுப் பதப்படுத்தலினால் ஏற்படும் சத்து இழப்புக்கள்
  • உங்களின் போஷாக்கு நிலையை அறிந்து கொள்ளல்

நிகழ்நிலை கற்றல் மூலத்திற்கு பின்வரும் இணைப்பை அழுத்தவும்

நிகழ்நிலை கற்றல் முறைமை

PDF Creator

மாணவர்களுக்கான நிகழ்நிலை கற்றல் வளம்.
மாணவர்களுக்கான நிகழ்நிலை கற்றல் வளம்.
error: Content is protected !!