பல்கலைக்கழகங்களை ஆரம்பித்தல் தொடர்பான அறிவிப்பு

Hits: 0

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களின் அன்றாட மனித நடவடிக்கைகளை படிப்படியாக ஆரம்பிப்பது தெடர்பான அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப, அம்மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களை எதிர்வரும் 11.05.2020 முதல் இயங்கச் செய்ய பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மாணியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கல்வி சார் ஊழியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களை மீண்டும் வேலைக்கு திரும்பும் நடவடிக்கைகளுக்கு நிறுவனத்தலைவர்கள் பொருத்தாமன பொறிமுறையை கையாளுமாறும் அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழக கல்விசார் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் தினம் தொடர்பாக அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் எனவும் அவ்வறிவுறுத்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Letter

Media Realise

error: Content is protected !!