பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் மாற்றமில்லை

Hits: 0

பட்டதாரிகள் நியமனம் தொடர்பில், தான் எடுத்த முடிவில் எந்தவிதமான மாற்றமும் கிடையாதென தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ​மேலும் கூறியதாவது,

அரச வேலைவாய்ப்புக்கு உள்வாங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான பயிற்சிகளை தேர்தல் முடியும் வரை ஒத்திவைப்பதற்கு எடுத்த முடிவில் எந்தவித மாற்றமும் கிடையாது. தேர்தல் விதிகளுக்கமையவே தாம் செயற்பட்டிருப்பதாகவும், நியமனங்ளையோ, பயிற்சிகளையோ தாம் தடைசெய்யவில்லை தேர்தல் முடிவும்வரை ஒத்திவைக்குமாறு மட்டுமே கோரினோம் எனவும் அவர் தெரவித்தார்.

Source: www.thinakaran.lk/2020/03/06

error: Content is protected !!