நியமனங்களை வழங்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை!

Hits: 0

வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் விடயத்தில் அரசாங்கம் தம்மை ஏமாற்றுவதாகத் தோன்றுகின்றது என தெரிவித்துள்ள வேலையற்ற பட்டதாரிகள் சங்கம், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி அரசாங்கம் தமக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நேற்று புதன்கிழமை(8/4) அரச நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் மாகாண சபை அமைச்சுக்கு ஒருங்கிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அந்த கடிதத்திலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தேர்தலுக்கு முன்னர் தொழில்வாய்பை பெற்றுக் கொடுக்குமாறு நாங்கள் தொடர்ந்தும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தோம். ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவும் கடந்த ஜனவரி முதலாம் திகதி எமக்கான நியமனங்களை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்திருந்தார்.

பின்னர் இந்த நியமனங்களை ஜனவரி மாதம் 15 வழங்குவதாக கூறி காலங்கடத்திய போதும் பெற்றுக் கொடுக்கவில்லை. அதனை பெப்ரவரியில் வழங்குவதாக அறிவித்தனர். அரசாங்கத்தின் இந்த தொடர்ச்சியான காலம் தாழ்த்தல் தொடர்பில் எமக்கு எழுந்த சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது.

மார்ச் மாதத்தில் பொதுத்தேர்தல் அறிவிக்கப்படும் என்பதை அறிந்திருந்தும், அரசாங்கம் பெப்ரவரி மாதம் இறுதிப்பகுதியில் பட்டதாரிகள் சிலருக்கான நியமனக்கடிதங்களை தபால் மூலமாக அனுப்பி வைத்திருந்தது. இது தேர்தல் சட்டத்திட்டத்திற்கமைய முறையற்ற செயலாகும். இதனை அறிந்திருந்தும் அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

இவ்வாறு வழங்கப்பட்ட நியமனங்கள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. தேர்தல் சட்டதை மீறும் செயற்பாடு என்று தேர்தல்கள் ஆணையாளர் அதனை இடைநிறுத்தியுள்ளார். இந்த நிலைமையின் போது அரச தரப்பினர் எமக்கான நியாயத்தை பெற்றுக் கொடுப்பதை விடுத்து , தேர்தல்கள் ஆணையாளர் மீதே குற்றம் சுமத்தி வந்தனர்.

இதேவேளை இந்த நியமணங்களிலும் தகுதிவாய்ந்த பல பட்டதாரிகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. ஜனாதிபதி செயலகத்தின் மூலம் நிர்வாகத்துறை சார்ந்த பட்டதாரி நியமணங்களின் போதும் குறிப்பிட்ட சிலருக்கே நியமணம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

அதன் போதும் தகுதிவாய்ந்த பட்டதாரிகளின் பெயர்கள் உள்ளடக்கப்படவில்லை. மற்றும் தபால் மூலமாக அனுப்பட்ட நியமண கடிதங்களில் பல சிக்கல்கள் காணப்பட்டதுடன், இது தொடர்பில் நாங்கள் உரிய தரப்பினருக்கு அறிவித்திருந்தோம். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக நியமணம் தொடர்பில் நம்பிக்கை இழந்தே இருந்தோம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உரையினூடாக பட்டதாரிகளுக்கான நியமனங்கள் தொடர்பில் அவர் கருத்துறைத்திருந்தார். இதனூடாக எமக்கான நியமணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இருப்பதாக தோன்றுகின்றது. அதனால் அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணைந்து கலந்துரையாடி எமக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அரசாங்கம் பட்டதாரிகளுக்கு நியமணமாக வழங்குவாதாக கூறிக் நியமணங்கடிதங்களை வழங்கியுள்ள போதிலும் , சிலரது பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வில்லை, பெயரில் மாற்றம் காணப்படுகின்றது. இன்னும் சிலரின் பெயரே இல்லை அதனால் இது போன்ற சிக்கல் நிலைமைகளை கருத்திற் கொண்டுஅவற்றை நிவர்த்தி செய்து நியமணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி நிலைமையின் போது , பட்டதாரிகளை சுகாதார சேவையில் இணைத்துக் கொள்ள விரும்பினால் சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமையவே தீர்வெடுக்க வேண்டும். அரசாங்கத்தின் செயற்பட்டினால் பயிற்சிதாரிகளாக நியமணம் பெற்றுக் கொண்ட பட்டதாரிகள் தற்போது எந்தவித தொழிலும் இன்றி இருக்கின்றனர். இவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். பட்டதாரிகளின் நியமணம் தொடர்பில் உரிய அதிகாரிகாரிகளும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் இணைந்து தீர்மானம் எடுப்பதுடன், நியமனங்களையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

நியமனங்களை வழங்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை!
நியமனங்களை வழங்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை!
நியமனங்களை வழங்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை!
நியமனங்களை வழங்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை!

Source: www.virakesari.lk 09-04-2020

error: Content is protected !!