தேசிய கல்வியியல் கல்லூரி இறுதிப் பெறுபேறு இவ்வாரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Hits: 5

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் இறுதி வருட இறுதிப் பெறுபேறு இவ்வாரம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வாரம் இடம்பெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி விவகார சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் இவ்வார நடுப்பகுதியில் நடைபெறவுள்ள நிறுவக சபையின் அனுமதி கிடைக்கப் பெற்றதும் இறுதிப் பெறுபேறு பட்டியல் கல்வி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் நிலைமை சுமுகமாகக் காணப்படும் பட்சத்தில், அடுத்த மாத ஆரம்பத்திலேயே நியமனங்களை வழங்குவதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெறும் என கல்வி அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

error: Content is protected !!