தரம் 5 புமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான தரம் 6க்கு பிரபல பாடசாலைகளை வழங்கும் ஒன்லைன் வேலைத்திட்டம்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான, பிரபல பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ள்ளன. விண்ணப்பங்கள் பாடசாலை அதிபரினால் அனுப்பப்படல் வேண்டும். நிகழ்நிலையில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய இறுதித்திகதி 24 டிசம்பர் 2020.

தரம் 5 புமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான தரம் 6க்கு பிரபல பாடசாலைகளை வழங்கும் ஒன்லைன் வேலைத்திட்டம் - Filehik.com
தரம் 5 புமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான தரம் 6க்கு பிரபல பாடசாலைகளை வழங்கும் ஒன்லைன் வேலைத்திட்டம்

இது தொடர்பாக கல்வி அமைச்சு அறிவிக்கையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்தவர்களுக்காக 2021 இல் 6 ஆம் தரத்தில் புதிய பாடசாலைகளை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் முதன்முறையாக நிகழ்நிலையில் கோரப்பட்டுள்ளன.

பிரபல பாடசாலைகளுக்கான விண்ணப்பங்கள், உரிய மாணவர்களின் பெற்றோரினால் பாடசாலை அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கேற்ப மாணவர்கள் விண்ணப்பித்துள்ள பாடசாலைகள், மற்றும் ஏனைய தகவல்களை நிகழ்நிலையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் பாடசாலை அதிபரினால் மேற்கொள்ளப்படும்.

இன்று தொடக்கம் எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி வரை பாடசாலை அதிபர்கள் தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். பரீட்சை எழுதிய 326, 264 மாணவர்களில் 47, 193 மாணவர்கள் மாவட்ட வெட்டுப்புள்ளிகளை பெற்று, வேறு பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.

டிசம்பர் 24 தொடக்கம் 31 வரை விண்ணப்பித்த பாடசாலைகளை மாற்ற மாத்திரம் அனுமதி வழங்கப்படும்.

Online Application

Closing Date: 24/12/2020

error: Content is protected !!