தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க அரசாங்கம் அனுமதி.

Hits: 0

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் காணப்படும் இடப்பரப்பிற்கு அமைய, சமூக இடைவெளியுடன் ஒரு வகுப்பில் அதிகபட்சம் 100 மாணவர்களை மாத்திரமே இணைத்துக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஒரே தடவையில் 100 மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாத வகுப்பறைகளில் , சமூக இடைவெளியுடன் இணைத்துக்கொள்ளக்கூடிய அதிகபட்ச மாணவர்களை மாத்திரமே அமர்த்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார தரப்பினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை அனைத்து தரப்பினரும் தொடர்ந்தும் பேண வேண்டும் என அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Source: Newsfirst 10/06/2020

error: Content is protected !!