சப்ரகமுவ மாகாணத்தில் 1500 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக ஆளுநர் தெரிவிப்பு

Hits: 0

சப்ரகமுவ மாகாணத்தில் 1500 ஆங்கிலம் மற்றும் ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

சப்ரகமுவ மாகாணத்தின் கல்வி நிலைமைகள் தொடர்பாக நேற்று முன் தினம் ஊடகங்களுக்குத் தகவல் வழங்கிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தகவல் தருகையில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களின் 1128 பாடசாலைகளில் மொத்தம் நான்கு இலட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

கடந்த காலப்பகுதிகளில் சப்ரகமுவ மாகாணத்தின் கல்வி நிலை மிகவும் உயர்ந்த நிலையில் காணப்பட்டது. எனினும் தற்போது இவ்வளர்ச்சியில் பின்னடைவு காணப்படுகிறது. அதனால் இந்நிலைமையை சீர் செ ய்து மீண்டும் நாம் இழந்த இடத்தை மீள்வதற்கு முயற்சிக்க வேண்டும். இவ்விடயத்தில் துறை சார்ந்தோரின் கூட்டு முயற்சி முன்னெடுக்கப்பபடல் வேண்டும். கிராமப்புற பாடசாலைகளினது கல்வி நடவடிக்கைகள் முறையாக மேற் கொள்ளப்படாதமையால் பெற்றோர்களும் மாணவர்களும் நகர்ப்புற பாடசாலைகளை நாடி வருகின்றனர். ஆசிரியர்கள் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றினால் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதற்கு இடமில்லை.எனவே தமது கடமைகளை முறையாக நிறைவேற்றாத ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உரிய கௌரவம் அளிக்கப்பட வேண்டும்.

நாட்டின் கல்வித் திட்டத்தை முறைப்படுத்தி வழிநடத்தும் ஜனாதிபதியின் கல்வி முறைமையை சப்ரகமுவ மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Source: http://www.thinakaran.lk/2020/07/04

error: Content is protected !!