க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது

கடந்த 2019 க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் மீள் திருத்த விண்ணப்ப முடிவுத் திகதி, ஜூலை 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி. பூஜித விடுத்துள்ள அறிக்கையிலேயே, இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அதற்கான விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னராக, பதிவுத் தபாலில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறு அவர் தெரித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை, www.doenets.lk எனும் இணையத்தளத்தை பார்வையிடுவதன் ஊடாகவோ, 1911 எனும் உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்வதன் ஊடாகவோ அல்லது, 011-2785231, 011-2785216, 011-2784037 எனும் தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்வதன் ஊடாகவோ பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

[pdf id=6909]

[pdf id=6913]

[pdf id=6911]

error: Content is protected !!