காணி அதிகாரி

Hits: 3

பதவி வெற்றிடங்கள்‌


மொரகஹகந்த – களுகங்க அபிவிருத்தி செயற்றிட்டம்‌ மகாவலி, கமத்தொழில்‌, நீர்ப்பாசனம்‌ மற்றும்‌ கிராமிய அபிவிருத்தி அமைச்சு

மொரகஹகந்த – களுகங்க அபிவிருத்திச்‌ செயற்றிட்டத்தின்‌ பின்வரும்‌ பதவிக்காக அங்கீகரிக்கப்பட்ட தகைமை மற்றும்‌ அனுபவம்‌ வாய்ந்த இலங்கைப்‌ பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள்‌ கோரப்படுகின்றன. ஒப்பந்த அடிப்படையில்‌ ஆட்சேர்க்கப்படூம்‌ இந்தப்‌ பதவியானது ஆரம்பத்தில்‌ ஒரு வருடத்திற்கு மட்டூப்படுத்தப்படும்‌ என்பதுடன்‌ அவர்‌ சேவை தேவைப்பாட்டின்‌ பிரகாரம்‌ செயற்றிறன்‌ மதிப்பீட்டின்‌ பின்‌ நீடித்துக்‌ கொள்வதற்கு கவனம்‌ செலுத்தப்படும்‌.

காணி வதிகாரி – பகுவி – 01 (25 06) தகைமை மற்றும்‌ அனுபவம்‌

பல்கலைக்கழக மானியங்கள்‌ ஆணைக்குழுவினால்‌ ஏற்றுக்கொள்ளப்படும்‌ விடயத்‌துறை தொடர்பான பட்டமொன்றைப்‌ பெற்றிருத்தல்‌. மற்றும்‌ மேற்படி தகைமையைப்‌ பெற்றுக்கொண்டதன்‌ பின்‌ குறைந்தபட்சம்‌ 04 வருட காலம்‌ காணி அதிகாரி பதவியில்‌ சேவை அனுபவம்‌.

வயது:

உச்ச வயதெல்லை 64 ஆகும்‌.

பொதுவான விடயம்‌:

சம்பளமானது 01/2019ஆம்‌ இலக்க முகாமைத்துவ சேவை சுற்றுநிரூபத்தின்‌ பிரகாரம்‌
PS-06 சம்பள வகுதி.

அரசாங்க சேவையிலுள்ள விண்ணப்பதாரர்கள்‌ தமது விண்ணப்பங்களை நிறுவனத்‌தலைவரின்‌ ஊடாக சமர்ப்பித்தல்‌ கட்டாயமாகும்‌.

சுயதரவுகளை உள்ளடக்கிய விண்ணப்பப்‌ படிவங்கள்‌, கல்வி மற்றும்‌ தொழில்சார்‌ தகைமைகளுக்கு இயைபான அனைத்து சான்றிதழ்களின்‌ புகைப்படப்‌ பிரதிகளுடன்‌
2020-08-04ஆம்‌ திகதி அல்லது அதற்கு முன்‌ “’செயற்றிட்டப்‌ பணிப்பாளர்‌, மொரகஹகந்தகளுகங்க அபிவிருத்தி செயற்றிட்டம்‌, கோன்கஹவல” எனும்‌ முகவரிக்கு பதிவுத்‌ தபாலில்‌ அனுப்புதல்‌ வேண்டும்‌.

விண்ணப்பங்களைத்‌ தாங்கி வரும்‌ கடித உறையின்‌ இடதுபக்க மேல்‌ மூலையில்‌ விண்ணப்பிக்கும்‌ பதவியின்‌ பெயரைக்‌ குறிப்பிடுதல்‌ வேண்டும்‌ என்பதுடன்‌ தாமதமாகக்‌ கிடைக்கப்பெறும்‌ மற்றும்‌ முழுமையற்ற விண்ணப்பங்கள்‌ கவனத்திற்‌ கொள்ளப்பட மாட்டாது. ஏற்புடைய அடிப்படைத்‌ தகைமைகளைப்‌ பூர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரர்கள்‌ மட்டுமே நேர்முகத்‌ தேர்வுக்கு அழைக்கப்படூவர்‌.

பொறி. டீ.பீ. விஜயரத்ன,

செயற்றிட்டப்‌ பணிப்பாளர்‌,

மொரகஹகந்த – களுகங்க அபிவிருத்தி செயற்றிட்டம்‌,
மகாவலி, கமத்தொழில்‌, நீர்ப்பாசனம்‌ மற்றும்‌

கிராமிய அபிவிருத்தி அமைச்சு.

காணி அதிகாரி
காணி அதிகாரி
error: Content is protected !!