எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்.

கடந்த வருடம் (2019) இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் வெளியிட தீர்மானித்துள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தில் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, பரீட்சைப் பெறுபேறுகள் உடனடியாக பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.

எனவே, பெறுபேறுகளை  பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம் எனவும் பாடசாலை அதிபர்களுக்கு ஒன்லைன் முறை மூலம் பெறுபேறுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

error: Content is protected !!