இலங்கை கல்வி நிர்வாக சேவை பரீட்சை வினா விடைகள் 2020

 1. இலங்கையில் முதலாவது மத்திய மகாவித்தியாலயம் எங்கு அமைக்கப்பட்டது? மத்துகம
 2. மத்திய மகாவித்தியாலயங்கள் எத்தனை? 54
 3. இலங்கை ஆசிரியர் சேவையில் எத்தனை தரங்கள் உள்ளன? 5 ( தரம் 3-II, 3-I, 2-II, 2-I, I)
 4. இலங்கையிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகள் எத்தனை? 19
 5. முதலாவதாக அமைக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி எது? மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரி
 6. சுதந்திர இலங்கையின் முதலாவது கல்வியமைச்சர் யார்? ஈ.ஏ.நுகாவெல
 7. இலவச சீருடைக்கு பதிலாக பண வவுச்சர் வழங்கும் நடைமுறை எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது? 2015
 8. கட்டாய கல்வி வயதெல்லை யாது? 5-16 வயது (20/4/2016)
 9. ‘ மகாபொல’ புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தவர் யார்? லலித் அத்துலக் முதலி
 10. “கல்வியின் புதியபாதை” எப்போது வெளியிடப்பட்டது 1972
 11. தேசிய பாடசாலைகள் எப்போது உருவாக்கப்பட்டது? 1987
 12. இலங்கையில் தற்போது எத்தனை தேசியபாடசாலைகள் உள்ளன? 353
 13. இலங்கையிலுள்ள கல்வி வலயங்கள் எத்தனை? 99 (ஆதாரம் 2017 G.C.E O/L பரீட்சை திணைக்கள அறிக்கை)
 14. தேசிய கல்விக்குறிக்கோள்கள் எத்தனை? 8
 15. தேசிய கல்விக்கொள்கையை வடிவமைக்கும் அமைப்பு எது? தேசிய கல்வி ஆணைக்குழு
 16. கலைத்திட்டத்தை வடிவமைப்பதில் பங்காற்றும் அமைப்பு தேசிய கல்வி நிறுவகம்
 17. இலங்கையில் கல்விப்பீடமுள்ள பல்கலைக்கழங்கள் எவை? கொழும்பு பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம்
 18. யுனெஸ்கோவின் 4 தூண்களும் எவை?
  • அறிவதற்காககற்றல்
  • செயலாற்றுவதற்காக கற்றல்
  • வாழக்கற்றல்
  • இணைந்து வாழக்கற்றல்
 19. பரிஸ் பாடசாலைகள் யாரால் ஆரம்பிக்கப்பட்டது?போர்த்துக்கேயரால்
 20. ஆங்கில பாடத்துக்கென ஆரம்பிக்கப்பட்ட தேசிய கல்வியியற் கல்லூரி எது? பேராதனிய தேசிய கல்வியியற் கல்லூரி, பெனிதெனிய
 21. அடிப்படை கற்றல் தேர்ச்சிகள் எவை?
  • சூழல் தொடர்பான தேர்ச்சி
  • தொடர்பாடல் தேர்ச்சி
  • சமயமும் ஒழுகலாறும்
  • விளையாட்டும் ஓய்வுநேர பயன்பாடும்
  • கற்கக் கற்றல்
  • வேலையுலகிற்கு தயார் செய்தல்
  • ஆளுமை தொடர்பான தேர்ச்சி
 22. இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்கள் எத்தனை? 15
 23. C.W.W கன்னங்கராவினால் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய கல்வித்திட்டத்தின் பெயரென்ன? ஹெந்தஸ (1932)
 24. முன்பள்ளிகளை கட்டுப்படுத்தும் அமைப்பு எது? உள்ளூராட்சி மன்றங்கள்
 25. பொது போதனா திணைக்களம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? 1869
 26. கல்வியியற் கல்லூரி ஆண்டு எப்போது? 2015
 27. குடியரசு, சட்டம் ஆகிய நூல்களை எழுதிய கல்வி சிந்தனையாளர்? பிளேட்டோ
 28. “கல்வியும் தத்துவமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களை போன்றன” என்று கூறியவர்? W.றோஸ்
 29. அரசியல் என்ற நூலை எழுதியவர்? அரிஸ்ரோட்டில்
 30. அனுபவங்களை அனுபவங்களுடாக அனுபவங்களாகவே பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியவர்?ஜோன் டூயி
 31. கட்டாய கல்வி சட்டமூலமாக்கப்பட்டது எப்போது? 1997(1003/05)
 32. உட்ப்படுத்தல் கல்வியாண்டு எப்போது? 2012
 33. “எமிலி” எழுதியவர்? ரூசோ
 34. உளப்பகுப்பு கொள்கை? சிக்மண்ட் புரொய்ட்
 35. மகாத்மா காந்தியின் 3H எவை?
  • கை
  • தலை
  • இதயம்
 36. 3 T யினால் தரப்படும் ஆசிரிய வகிபாகங்கள்?
  • கடத்தல்
  • பரிமாற்றல்
  • நிலைமாற்றல்
 37. தற்போது அமுலிலுள்ள கல்வி கட்டளைச்சட்டம் – 1939, 31ம் இலக்க கல்வி கட்டளைச்சட்டம்
 38. திறந்த பல்கலைக்கழகம் எப்போது அமைக்கப்பட்டது?1980
 39. சுயமொழிப்போதனை எப்போது? 1956
 40. இலங்கையிலுள்ள அரசபாடசாலைகள்(2017டிசம்பர்) எத்தனை? 10194
 41. தற்போதைய தரவுகளின்படி(2017) அரச பாடசாலைகளில் ஆசிரியர் மாணவர் விகிதம் – 1:17
 42. தொழினுட்பதுறைக்கான கல்வியியற் கல்லூரி எங்கே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது? குளியாப்பிட்டிய
 43. நாடாளவிய ரீதியில் தரம் 7 மாணவர்களின் தாங்கும் திறனை அறிய மேற்க்கொள்ளப்பட்ட செயற்றிட்டம் திடசங்கல்பம்
 44. முதலாவது திறன்வகுப்பறை (Smart class room) எங்கு அமைக்கப்பட்டது? ஜயவர்த்தனபுர(ஆண்கள்) மகாவித்தியாலயம்
 45. வணிகக்கல்விக்கான கல்வியியற் கல்லூரி எங்குள்ளது?மகரகம
 46. தேசிய கல்விக்குறிக்கோள்களில் முதலாவதாக வலியுறுத்தப்படுவது? தேசிய ஒருமைப்பாடு
 47. யுனெஸ்கோவின் நான்கு தூண்களில் உலகளாவியரீதியில் தற்போது பிரதானப்படுத்தப்படுத்தப்படுவது?இணைந்துவாழக்கற்றல்
 48. கல்வியுடன் தொடர்புடைய சேவைகள் எவை?
  • கல்விநிர்வாக சேவை(SLEAS),
  • கல்வியியலாளர் சேவை(SLTES)
  • அதிபர் சேவை(SLPS)
  • ஆசிரிய சேவை(SLTS)
 49. க.பொ.த(உ/த) தொழினுட்ப பாடத்துறைக்குரிய பாடங்கள் எவை?
  • பொறியியற் தொழினுட்பம்/ உயிர்முறையியற் தொழினுட்பம்
  • தொழினுட்பத்துக்கான விஞ்ஞானம்
  • கணிதம்
  • வரலாறு
  • புவியியல்
  • I.T போன்ற
 50. இலங்கையில் அண்மையில் எதிர்ப்புக்குள்ளாகும் தனியார் மருத்துவ பல்கலைக்கழத்தின் பெயர் யாது?சைட்டம்
 51. தேசிய பாடசாலையின் நேரடி நிர்வாக நடைமுறையை கட்டுப்படுத்துவது? நிரல் கல்வியமைச்சு
 52. 1995 ஆசிரியர் பிரமாணக்குறிப்பின்படி ஆசிரியர் தரங்கள் 3-ii, 3-i , 2-ii, 2-i , 1
 53. க.பொ.த(உ/த)தொழினுட்ப பிரிவின் இரண்டு துறைகளும் எவை?
  • எந்திரவியல் தொழினுட்பம்
  • உயிர்முறையியல் தொழினுட்பம்
 54. க.பொ.த (சா/த) பாடசாலை பரீட்சார்த்தியொருவர் தோற்றக்கூடிய ஆகக்கூடிய பாடங்களின் எண்ணிக்கை 9
 55. க.பொ.த (சா/த) மையப்பாடங்கள் எவை?
  • மொழி
  • கணிதம்
  • விஞ்ஞானம்
  • வரலாறு
  • சமயம்
  • ஆங்கிலம்
 56. இலவசக்கல்வி சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?1944
 57. ஆசிரியர் சுயமதிப்பீட்டை ஊக்குவிக்க. 2016 முதல் அமுற்ப்படுத்தப்படுவது? ஆசிரியர் அறிக்கை புத்தகம்
 58. ஆசிரியர் ஒழுக்ககோவை கொண்டுவரப்பட்ட ஆண்டு?2012(உறுதிப்படுத்தவும்)
 59. அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை வலுப்படுத்த தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்ட துறை எது? 13 வருட உத்தரவாத கல்வி
 60. இலவச கல்வியை மேம்படுத்த இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து கல்வியமைச்சு வழங்கும் காப்புறுதி – சுரக்க்ஷ
error: Content is protected !!