இலங்கையில் முதன்முறையாக அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்கு

Table of Contents

கீழே 1 முதல் 6 வரையான சட்டப் பிரிவுகளில் விபரிக்கப்படும் நபர்கள் பதிவு செய்யப்படுவதற்கு உட்படமாட்டார்கள் என்பதோடு, அதற்கான உரிமையும் இல்லை.

 1. 1948 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்ட செல்லுபடியான வீசா அல்லது ……………..
 2. குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் 2(1) ஆம் பிரிவின் கீழ் இடப்பட்ட கட்டளை/ கட்டளைகளுக்கு அமைவாக அச்சட்டத்தின் III ஆம் பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக விடுவிக்கப்பட்ட நபர்.
 3. 1967 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இந்து – இலங்கை ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்ட செல்லுபடியான வதிவதற்கான அனுமதிப்பத்திரத்தினைக் கொண்ட நபர்.
 4. குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் ஏற்பாடுகளை மீறி 1971.04.05 ஆம் திகதியிற்கு முன்னர் அல்லது அத்தினம் அல்லது அதன் பின்னர் இலங்கைக்கு வருகைதந்துள்ள அல்லது வருகைதரும் நபர்கள்.
 5. குடிவரவு குடியகல்வுச் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் ஏற்பாடுகளை மீறி 1971.04.05 ஆம் திகதி அல்லது அதன் பின்னர் இலங்கையில் தங்கியிருக்கும் நபர்கள்.
 6. 1967 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க இந்து – இலங்கை ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தும் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் கீழ் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அனுப்புவதற்கு நியமிக்கப்பட்ட நபர்கள்.

இவ்வாறான நிலைக்கு உட்படாத 1971.04.05 ஆம் திகதி அல்லது அதன் பின்னர் இலங்கையில் வசிக்கும் அல்லது இலங்கைக்கு வருகை தரும் மற்றும் 15 வயது பூர்த்தியடைந்த அல்லது பூர்த்தியடையும் அனைத்து நபர்களும் பதிவு செய்யப்படுவதற்கு உட்படுவார்கள்.

பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கக்கூடிய உச்ச பட்ச காலப்பகுதி மற்றும் பொருத்தமான வயதெல்லை.

 • 1971.04.05 ஆம் திகதியன்றோ அல்லது அதன் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த அல்லது சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படக் கூடிய நபர்களினால், அவர்கள் இலங்கைக்கு வருகை தந்து 6 மாத காலத்தினுள்.
 • சட்டத்தின் 2 (2) பிரிவின்படி பதிவு செய்யப்படுவதற்கு உற்படாத நபர், அதன் பின்னர் அந்நபர் பதிவு செய்தலுக்கு உட்பட்ட நாளிலிருந்து 6 மாத காலப்பகுதியினுள்.
 • 1981 ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதியின் பின்னர் 15 வயதினைப் பூர்த்தி செய்தவர்கள், சட்டத்தின்கீழ் பதிவு செய்வதற்கு உரித்துடையவர்கள், அனைத்து நபர்களும் தாம் 15 வயதினைப் பூர்த்தி செய்த தினத்திலிருந்து ஒரு வருட காலப்பகுதிக்குள்.

பதிவு செய்து முதல் தடவை அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்க வேண்டிய ஆவணங்கள்

ஆ.ப.தி/வி/1,7,8 மாதிரிப்படிவத்துடன் கிராம சேவையாளர் மற்றும் பிரதேச செயலாளர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஒருவரினால் உறுதிப்படுத்தப்பட்ட கீழ் குறிப்பிடப்படுகின்ற ஆவணங்களின் போட்டோ பிரதி. (முன்வைக்கப்பட்டுள்ள பிரதிகளினூடாக விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் பிறந்த திகதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்)

 • பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதி அல்லது
 • உத்தேச வயதுச் சான்றிதழுடன் பிறந்த திகதியை உறுதிப்படுத்தக் கூடிய ஆவணம் (பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்/ பாடசாலை விடுகைப் பத்திரம்/ தோட்டவிடுகைப் பத்திரம்/ உறுதிப்படுத்தப்பட்ட ஜாதகப் பிரதி/ திருமணப் பதிவுச் சான்றிதழ்/ பிரஜா உரிமைச் சான்றிதழ்/ சத்தியக் கடதாசியின் மூலப் பிரதி)
 • பிரஜா உரிமைச் சான்றிதழ் (தொடர்பு படுத்துங்கள்)

40 வயதிற்கு மேலான பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது உத்தேச வயதுச் சான்றிதழ் இல்லாத விண்ணப்பதாரர் தமது பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்துவதற்காக கீழ்வரும் ஆவணங்களை முன்வைக்கவும்

 • மேலதிக மாவட்டப் பதிவாளரால் விநியோகிக்கப்பட்ட தேடுதல் விளைவுப் பத்திரம்.
 • பெயர் மற்றும் பிறந்த திகதியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஏற்றுக் கொள்ளக்கூடிய எழுத்து மூல சாட்சி (பிள்ளையின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம்/ பாடசாலை விடுகைப் பத்திரம்/ தோட்டவிடுகைப் பத்திரம்/ உறுதிப்படுத்தப்பட்ட ஜாதகப் பிரதி/ திருமணப் பதிவுச் சான்றிதழ்/ பிரஜா உரிமைச் சான்றிதழ்/ வயோதிபர் அடையாள அட்டை)
 • பெயர், பிறந்த திகதி மற்றும் பிறந்த இடத்தினை உறுதிப்படுதுவதற்காக சத்தியக் கடதாசியின் மூலப் பிரதி. (மாதிரியினைத் தொடர்பு படுத்துங்கள்)

பதவியை உறுதி செய்வதற்காக முன்வைக்க வேண்டிய ஆவணங்கள்

 • அரச பிரிவு – 6 மாத காலத்தினுள் பெற்றுக் கொள்ளப்பட்ட சேவைச் சான்றிதழின் மூலப் பிரதி
 • தனியார் பிரிவு – 6 மாத காலத்தினுள் பெற்றுக் கொள்ளப்பட்ட சேவைச் சான்றிதழின் மூலப் பிரதி.
 • வைத்தியர், பொறியியலாளர், வழக்கறிஞர், பட்டயக் கணக்காளர் மற்றும் கட்டடக்கலைஞர் போன்ற பதவிப் பெயர்களை உள்ளடக்குவதற்காக பட்டச் சான்றிதழ் மற்றும் தொழில் தகைமைச் சான்றிதழ் முன்வைக்க வேண்டும்.
 • ஓய்வூதியர் என்பதை உள்ளடக்குவதற்காக ஓய்வூதியக் கடிதம்/ ஓய்வூதிய அட்டை முன்வைக்கப்பட வேண்டும்.

அடையாள அட்டை விநியோகிப்பதற்குத் அவசியமான ஏனைய ஆவணங்கள்

 • பௌத்த துறவி ஆயின் பௌத்த மத அலுவல்கள் அமைச்சினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சாமனேரு/ உபசம்பதா சான்றிதழ்.
 • ஏனைய மதகுருமார்களுக்காக உரிய திணைக்களம் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட சான்றிதழ்.
 • துறவு வாழ்க்கையிலிருந்து மீண்ட பின்னர் அது தொடர்பில் பௌத்த மத அலுவல்கள் திணைக்களத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும் சான்றிதழ்
 • வாழ்க்கைத் துணையின் பெயரைப் பெற்றுக் கொள்வதற்காக – திருமணப் பதிவுச் சான்றிதழ்
 • இலங்கை தாய் அல்லது தந்தைக்கு வெளிநாட்டில் பிறந்த நபர் ஒருவர், குடிவரவு குயகல்வுத் திணைக்களத்தினூடாக இலங்கைப் பிரஜாவுரிமையினைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் வழங்கப்படும் பிரஜாவுரிமைச் சான்றிதழ். (தொடர்பு படுத்துங்கள்)
 • இரட்டைப் பிரஜா உரிமை உள்ள நபர்களாயின் இரட்டைப் பிரஜா உரிமைச் சான்றிதழ். (தொடர்பு படுத்துங்கள்)
 • 1 3/8 x 7/8 அங்குல அளவிலான 3 வர்ணப் புகைப்படங்கள் முன்வைக்கப்பட வேண்டும். (பின்னணி வர்ணம் – ஆகாய நீலம்/ Sky Blue)
 • முத்திரைக் கட்டணம்: 3.00 ரூபா
 • குறிக்கப்பட்ட உரிய கால எல்லைக்குள் (தொடர்புபடுத்துங்கள்) பதிவு செய்வதற்கு தவறுகின்ற விண்ணப்பதாரர்கள், கால தாமதத்திற்கான காரணங்களை குறிப்பிட்டு கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் ஊடாக அதனை உறுதிப்படுத்தி ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் ………………………. (இலக்கம்) என்ற மாதிரி (தொடர்புபடுத்துங்கள்)
 • விண்ணப்பப்படிவங்களை உறுதிப்படுத்தல்:
  • கிராம உத்தியோகத்தர் (கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்​பப்படிவங்களில் பிரதேச செயலாளர் மேலொப்பமிடுவது கட்டாயமானது).
  • பாடசாலை மாணவர்களாயின் பாடசாலை அதிபர்.
  • தோட்ட வதிவாளர்களாயின் தோட்ட அதிகாரி.
  • விசேட தேவைகள் மற்றும் காரணங்களின் போது ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் நாயகம் மூலம் அதிகாரம் வழங்கப்பட்ட உத்தியோகத்தர்.

அடையாள அட்டையினைப் பெற்றுக் கொள்வதற்கு அமைவாக பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை கையளித்தல்.

 • சாதாரண சேவை:
  • விண்ணப்பப்படிவத்தினை உறுதிப்படுத்திய உத்தியோகத்தருக்கு
 • ஒரு நாள் சேவை:
  • உரிய உத்தியோகத்தர் உறுதிப்படுத்திய பின்னர் ஆட்பதிவுத் திணைக்கள கொழும்பு பிரதான காரியாலயத்தில் ஒரு நாள் சேவைப் பிரிவிற்கு

Download Application Form

[pdf id=8182]

Source: http://www.drp.gov.lk

error: Content is protected !!