இலங்கையில் கையடக்கத்தொலைபேசிப் பாவனை அதிகரித்துள்ளது காரணம் இதுதான்..!

Hits: 0

இலங்கையில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில், கையடக்கத் தொலைபேசிகளின் பாவனை அதிகரித்துள்ளதை கூகுள் நிறுவனத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிதுள்னன.

குறிப்பாக, வீடுகளில் இருந்து கையடக்கத்தொலைபேசிகளை பயன்படுத்துவது 32 சதவீதத்தால் அதிகரித்துள்ளதென கூகுள் அறிவித்துள்ளது. 

மேலும், விற்பனை நிலையங்கள், பூங்காக்கள், மருந்தகங்கள், பொதுப் போக்குவரத்து தரிப்பிடங்கள் போன்றவற்றில் கைபேசிப் பயன்பாடு 50 சதவீதத்திற்கு மேலாக குறைந்துள்ளதென கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்தோடு, covid-19 தொற்றை தடுப்பதற்காக பல்வேறு நாடுகள் சமூக இடைவெளி பேண முனைகின்றன. இம்முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதே கூகுள் நிறுவனத்தின் நோக்கமெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கற்றல் வளங்கள் Online Learning Materials

error: Content is protected !!