இரண்டாம் மொழி (சிங்களம் / ஆங்கிலம் மற்றும் தமிழ் ) டிப்ளோமா மற்றும் அடிப்படைச் சான்றிதழ் கற்கை நெறி வகுப்புக்களுக்கான விண்ணப்பம் கோரல் 2019/2020

விண்ணப்பிக்கத் தகுதியானோர்

  1. இரண்டாம் மொழிசித்தியடைய வேண்டிய அரச அலுவலர்கள்.
  2. மூன்றாம் நிலைக் கல்வி பயிலும் மாணவர்கள்.
  3. பாடசாலையிலிருந்து விலகியோர்.
  4. மற்றும் சிங்களம், ஆங்கில தமிழ் மொழிகள் கற்க ஆர்வமுள்ளோர்.

விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைக் கல்வித்தகமை

  • க.பொ.த (சா/த) சித்தி

நிபந்தனைகள்

  • ஒருவர் ஒரு கற்கை நெறியினை ஒருமுறை மாத்திரம் தொடர முடியும். (முன்னைய கல்வியாண்டுகளில் கற்கை நெறியினை தொடர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது.)
  • கற்கை நெறியினை தொடர விரும்புபவர்கள் கற்கை நிலைய ஒழுங்கு விதிகளுக்கமைவான ஒப்பந்தம் ஒன்றினை பணிப்பாளருடன் செய்து கொள்ளுதல் வேண்டும்.

காலப்பகுதி

  • அடிப்படைச் சான்றிதழ் கற்கைநெறி – மூன்றுமாதங்கள்
  • டிப்ளோமா கற்கைநெறி – ஒருவருடம்
  • வாராந்தம் எட்டு மணித்தியால வகுப்புக்கள். (வார இறுதிநாள் மற்றும் வார நாட்களில் வெவ்வேறு பிரிவுகள்)

வகுப்புக்கள் நடைபெறும் இடம்

மும்மொழிக் கற்கை நிலையம், யா/கலட்டி மெதடிஷ்தமிஷன் தமிழக் கலவன் பாடசாலை, இராமநாதன் வீதி, கலட்டி, யாழ்ப்பாணம்.

விண்ணப்பிக்கும் முறை

பதிவில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களைப் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை 2020.12.30 ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ கீழே தரப்பட்டுள்ள முகவரியில் கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைத்தல் வேண்டும்.

பணிப்பாளர்,
மும்மொழிக் கற்கை நிலையம்,
யா/கலட்டி மெதடிஷ்தமிஷன் தமிழக் கலவன் பாடசாலை,
இராமநாதன் வீதி,
கலட்டி,
யாழ்ப்பாணம்.

கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தெரிவுகள் இடம்பெறும்.

மேலதிகவிபரங்களிற்கு:
தொலைபேசி இல: 021 223 1344
பணிப்பாளர்

Download Application Form

[pdf id=8387]

Source: http://edudept.np.gov.lk/

Closing Date: 30/12/2020

error: Content is protected !!