இந்த மாத இறுதிக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்

Hits: 0

கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர (A/L) பரீட்சையின் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

இம்முறை வெளியிடப்படவுள்ள பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியாக முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்படமாட்டாது.

error: Content is protected !!