ஆண்ட்ராய்ட் போன்களை குறிவைத்து களமிறங்கி இருக்கும் ஓன்மீ(Ownme) வைரஸ்.. WhatsApp ஐ தாக்கும் அபாயம்

Hits: 0

ஆண்ட்ராய்ட் போன்களை சமீப காலமாக ஓன்மீ (Ownme) என்ற வைரஸ் தாக்கி வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மோசமான ஐ லவ் யூ வைரஸ் தொடங்கி கணினி மற்றும் செல்போன்களை தாக்கும் வைரஸ்கள் உலகில் நிறைய இருக்கிறது.

இந்த நிலையில் ஆண்ட்ராய்ட் போன்களை மட்டும் குறிவைத்து களமிறங்கி இருக்கும் வைரஸ்தான் ஓன்மீ (Ownme) என்ற வைரஸ் ஆகும். இது போன்களில் தானாக தரவிறங்கி அந்த போன்களை பெரிய அளவில் பாதிக்க வைக்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.  

இந்த ஓன்மீ (Ownme) என்ற வைரஸ் போன்களில் நாம் இணையத்தை பயன்படுத்திக் கொண்டு இருக்கும் போதே டவுன்லோட் ஆகிவிடும். இந்த ஓன்மீ (Ownme) என்ற வைரஸ் தனிப்பட்ட தகவல்களை திருடவே உருவாக்கப்பட்டுள்ளது. நம்முடைய இணைய பயன்பாடும், நாம் தேடும் சில குறிப்பிட்ட இணையத்தளம் இந்த வைரஸ் உள்ளே வருவதற்கு உதவியாக இருக்கிறது. வாட்ஸ் ஆப்பில் நாம் அனுப்பும் புகைப்படங்களை திருடுவது, நாம் பேசுவதை திருடுவது ஆகிய ஹேக்கிங் இது செய்கிறது. நாம் போன்களில்  வைத்திருக்கும் 90 சதவிகித தகவல்களை இதன் மூலம் திருட முடியும்.

Tik Tok Appற்கு போட்டியாக களமிறங்கும் பேஸ்புக்கின் லாஸ்ஸோ App என்ன சிறப்பு

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!