ஆங்கில பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்காக உயர் தேசிய டிப்ளோமாதாரிகளை இணைத்துக்கொள்ளல்

Hits: 0

தென்மாகாணக் கல்வியமைச்சின் கீழ் உள்ள சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளில் நிழவும் ஆங்கிலப் பாட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆசிரிய சேவைப் பிரமாணங்களுக்குகேற்ப பிரதேச செயலாளர்
பிரிவு மட்டத்தில் இலங்கை ஆசிரிய சேவை 3-ம் வகுப்பின் 1ம் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக தகுதிவாய்ந்த டிப்ளோமாதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பொதுவான தகைமைகள்

 1. இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
 2. இலங்கை உயர் தொழிநுட்பக் கல்வி நிறுவனத்திலிருந்து ஆங்கில மொழி தொடர்பான உயர்
  தேசிய டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல்.
 3. விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முந்திய ஒரு வருடமாக தென்மாகாணத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

ஒரு விண்ணப்பதாரர் தென்மாகாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களுக்கிடையில் தனது வதிவிடத்தினை மாற்றியிருந்தால் அல்லது வெளி மாகாணமொன்றிலிருந்து தென்மாகாணத்திற்கு வசிப்பதற்காக வந்தவராக இருந்தால், விண்ணப்பம் பொறுப்பேற்கப்படும் இறுதித் தினத்திற்கு விண்ணப்பதாரருடைய நிரந்தர வதிவிடம் மற்றும் விண்ணப்பதாரருடைய துணைவரின் 1 வருட வதிவிடமானது குறித்த பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.

 1. நன்னடத்தையும் உடலாரோக்கியமும் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
 2. விண்ணப்பங்கள் பொறுப்பேற்கப்படும் இறுதித்தினத்திற்கு 18 வயதிற்குக் குறையாதவராகவும் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகைமைகள்

 1. இலங்கை ஆசிரியர் சேவையின் 3-ம் வகுப்பின் 1-ம் தரத்துக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக
  ஆசிரிய சேவை பிரமாணத்தின் 13.11 வரை அமைந்துள்ள வகையில் கீழ்த்தரப்படும்
  டிப்ளோமாதாரியாக இருத்தல்.

“டிப்ளோமாதாரர்கள் என்பதன் மூலம் கருதப்படுவது ஆசிரியர் சேவைப் பிரமாணத்தின் 13.14 ல் குறிப்பிடப்பட்டுள்ளது போன்று பட்டப் பின் பட்ட கல்வி டிப்ளோமா அல்லாத உரிய விடயத்திற்காக கல்வி விடயத்திற்குப் பொறுப்பான நிரல் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தினால் வழங்கக் கூடிய இரு ஆண்டுகளை விடக் குறையாத பாடநெறி கால எல்லையைக் கொண்டதும் தேசிய தொழில் சார் தகைமை மட்டம் ஆறு (6) விடக் குறையாத டிப்ளோமா பாடநெறியினை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து சான்றிதழ் பெற்றவர்.”

 1. க.பொ.த. சாதாரண தரத்தில் இரு அமர்வுகளுக்கு மேற்படாத தடவைகளில் தாய் மொழி மற்றும் கணிதத்தில் சித்தியுடன் மூன்று திறமைச் சித்திகளுடன் ஆறு பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்
 2. க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் ஒரே முறையில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்

Application Forms

Sinhala Application form

Tamil Application Form

English Application Form

More Detail

Sinhala

Tamil

English

Closing Date: 18/10/2020

error: Content is protected !!