அனைத்து பரீட்சைகளையும் பிற்போடுவதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Hits: 19

திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகளையும் பிற்போடுவதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அத்தோடு ஏற்கனவே திட்டமிடப்பட்ட பதிவு மற்றும் மீள்பதிவு நடவடிக்கைகள் தொடரும் என திறந்த பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறே ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த கல்வி நடவடிக்கைள் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதிக்குப் பின்னரே பரீட்சைகள் தொடர்பாக அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்படும் பரீட்சைகள் தொடர்பாக ஒருவார கால குறுகிய காலத்தில் திறந்த பல்கலைக்கழகத்தினது இணையத்தளத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

All the examinations scheduled to be held up to 31-10-2020 has been postponed due to the current COVID-19 situation in the country. All examinations scheduled after 01-11-2020 will be held as per already informed schedules.

Registrations/Re-registrations will continue as scheduled and all other academic activities too will be conducted as scheduled by the individual faculties. Please note that only a short notice of one week will be given when rescheduling postponed examinations and it will be notified in the OUSL website as well as MyOUSL.

Registrar
OUSL

error: Content is protected !!